தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் மோசடி ஸ்பேம் அழைப்புகளால் தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்க, தொலைபேசி எண்ணில் ‘Do Not Disturb’ (DND) சேவையை செயல்படுத்தலாம்.
இதற்காக மொபைலில் START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு SMS அனுப்புவதன் மூலம் வர்த்தக அழைப்புகளைத் தடுக்கலாம். DND சேவையை செயல்படுத்திய பிறகும் விதிமீறல் அழைப்புகள் வந்தால் அவற்றை புகாரளிக்கவும் முடியும்.
மேலும், பல ஸ்மார்ட்போன்களில் உள்ள ‘Block Unknown Calls’ போன்ற வசதிகளை பயன்படுத்தி, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கலாம்.
ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் காணவும், தேவையற்ற எண்களைத் தடுக்கவும் Truecaller போன்ற செயலிகளையும் பயன்படுத்தலாம். தெரியாத நபர்களிடம் OTP, வங்கி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை பகிராமல் இருப்பதும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.




