காய்கறிகளிலேயே மிகவும் சின்ன காய் என்றால் அது சுண்டைக்காய்..!! இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

Oplus_131072

காய்கறிகளிலேயே மிகவும் சின்ன காய் என்றால் அது சுண்டைக்காய் தான் . இந்த சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்கள் எல்லாம் நிறைஞ்சு கிடைக்கும் சேமிப்புக் கிடங்கு என்று கூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை நிறைய வேலைகளைச் செய்யக்கூடிய பெரிய அளவிலான மருத்துவ குணங்கள் எல்லாம் இந்த சுண்டைக்காய் தான் செய்யும். எனவே இவற்றை இயற்கையின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். தேவையில்லாத செல் பாதிப்புகள் எல்லாம் நம்ம உடம்புல ஏகப்பட்ட வியாதிகளை கொண்டு வந்து சேர்த்திடும். அது போன்ற செல் பாதிப்பு பிரச்சினை எல்லாம் இந்த சுண்டைக்காய் சாப்பிட்டா வராது. நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும் போது நல்ல ஒரு சுறுசுறுப்பைத் தந்து உடலைத் தேற்றும் சக்தியும் இந்த சுண்டைக்காயில் இருக்கிறது. நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் ரொம்ப அவசியம். அதே போல வைட்டமின் A,C,E மாதிரியான சத்துக்களும் நம்ம உடம்புக்கு தேவை, இந்த சுண்டைக்காய்ல இந்த சத்துக்கள் எல்லாம் எக்கச்சக்கமாக இருக்கிறது.

குறிப்பாக இந்த கொரோனா சமயத்துல நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் C உள்ள உணவு பொருளை எடுத்து கொள்ள வேண்டுமென்று டாக்டர் எல்லாம் சொல்வார்கள். அந்த மாதிரி வைட்டமின் C அதிகமா இருக்கும் உணவு இந்த சுண்டைக்காய். ஆரஞ்ச், கொய்யா, பப்பாளி மாதிரியான பழங்கள்ல இருக்குற அளவுக்கு வைட்டமின் C இந்த சுண்டைக் காயிலையும் இருக்கிறது. இந்த சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சீரா வச்சு இருக்கிறது. ரத்தத்தில கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்கள்ல சேர்ந்து ஏதாச்சும் பிரச்சினை ஏற்படுத்தாம தவிர்க்குற மிக அற்புதமான சக்தி இதுக்கு இருக்கிறது.

Read Previous

தினமும் ஒரு தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிடுவது ஒரு இயற்கை அமிர்தத்திற்குச் சமம்..!!

Read Next

KFC ஸ்டைல் சிக்கன் செய்வது எப்படி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular