நடப்பு பாசன ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 26.954 டிஎம்சி காவிரி நீர் பற்றாக்குறையை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்திற்கான உரிய தண்ணீரை கர்நாடகா ஏன் இன்னும் திறந்துவிடவில்லை?” என கர்நாடக அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதுடன், விவசாயிகளின் பாசனத் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.




