தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் கே.எஸ்.எஸ்.ஆர்., தவெக அரசை விமர்சித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த திமுக உறுப்பினர்கள், அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சட்டப்பேரவை விதிகளின்படி முன்னாள் முதலமைச்சர்களை பெயர் கூறி அழைக்கக்கூடாது என்பதால், இந்த விவகாரம் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




