கிண்டியில் ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! 21 நாட்களில் தொழில் அனுமதி!

 

 

சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு’ இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கியது.

 

மாநாட்டில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழகத்தில் திறமையான மனிதவளம் அதிக அளவில் இருப்பதாகவும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகள் விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளை வெறும் 21 நாட்களில் வழங்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read Previous

திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் சோகம்! லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு!

Read Next

தமிழகத்தில் விண்வெளித் துறைக்கு புதிய வேகம்! ரூ.250 கோடி முதலீடு செய்யும் ஸ்கைரூட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular