முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் விண்வெளித் துறையில் புதிய முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பல விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயர்தொழில்நுட்ப விண்வெளி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்குத் தேவையான திறமையான மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு தமிழகத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தில் விண்வெளி தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளும் தொழில் வாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




