கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்: கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!

Oplus_16908288

 

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுடுகாட்டில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் ரஞ்சன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கல்லறை மீது ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

 

நேற்று (ஆகஸ்ட் 13) இரவு நண்பர்கள் சிலர் ரஞ்சனை வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோஷ்டி மோதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Read Previous

“நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்கள்; அவைக்கு வருவதில்லை” – திருச்சி சிவா!

Read Next

சபாநாயகர் தேநீர் விருந்து விவகாரம்: கனிமொழி விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular