“நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்கள்; அவைக்கு வருவதில்லை” – திருச்சி சிவா!

 

 

பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடாளுமன்ற கட்டடத்திற்கு வந்தாலும், அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

 

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை மத்திய அமைச்சர்கள் முறையாக கவனிப்பதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். கேள்விகள் எதுவாக இருந்தாலும், ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள அறிக்கைகளையே அமைச்சர்கள் வாசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டிய திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

சென்னையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ பணியிடங்கள்!

Read Next

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்: கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular