குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டை இந்த மாறி செஞ்சு கொடுங்க..!!

Oplus_131072

சத்து மாவு உருண்டை செய்வது எப்படி .

சத்துமாவு உருண்டை.

தேவையானவை: சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 200 கிராம்.

செய்முறை: சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.

 

Read Previous

இந்த வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்புக்கு உடனடி தீர்வு இதுதான்..!!

Read Next

உடலை சீராக வைத்துக்கொள்ள நமது முன்னோர்கள் சொன்ன மருத்துவ வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular