முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாகும் முன்பே முன்பதிவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தகவல்களின்படி, முன்பதிவு வசூல் ரூ.10 கோடியை கடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3.86 கோடிக்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வெளியாகும் தேதி நெருங்குவதால், முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.151 கோடி மற்றும் விஜயின் முந்தைய ‘லியோ’ திரைப்படத்தின் ரூ.149 கோடி என்ற சாதனைகளை ‘ஜனநாயகன்’ முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




