மேற்கு வங்கத்தில் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை: அமுல் ரூ.700 கோடி முதலீடு..!!

 

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில், அமுல் நிறுவனத்தின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பில் ‘வங்காள பால் பண்ணை திட்டம்’ அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை உருவாக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

புதிய ஆலை மூலம் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி, 10 லட்சம் கிலோ தயிர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.25 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்றும், மாநிலத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த தொழில்துறை வளர்ச்சிக்கு இது ஊக்கமளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

‘கூலி’ சாதனையை முறியடிக்குமா ‘ஜனநாயகன்’? ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு..!!

Read Next

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular