திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஜூலை 19) 90,956 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05 கோடி வசூலாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 33,046 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதுடன், 4.44 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. அதேபோல், 2.94 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர்.
பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டோக்கன் இல்லாத இலவச தரிசனத்திற்காக சிலாதோரணம் வரை வரிசை நீண்டுள்ளது. இதனால், இலவச தரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிடும் பக்தர்கள், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தரிசனத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.




