கோயிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

 

 

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் இன்று (ஆக.17) அதிகாலை பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

 

புனித ஷ்ராவண மாதத்தை முன்னிட்டு வழிபாடு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்த நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

மேலும், 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read Previous

BHEL-ல் 530 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! தேர்வு எழுத தேவையில்லை!

Read Next

வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்! – புதிய திட்டம் தொடக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular