வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்! – புதிய திட்டம் தொடக்கம்!

 

 

வீடு, மனை வாங்குவோர் எளிதாக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஆக.17) தொடங்கி வைக்கிறார்.

 

இதன்படி, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகத்தில் இருந்தே பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

 

இந்த புதிய முறையில் முதல் மனை விற்பனை (First Sale of Plot), முதல் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை (First Sale of Flat), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

 

மேலும், வங்கிக் கடனுக்கான அடமான ஆவணங்கள் மற்றும் ரசீது ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Read Previous

கோயிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

Read Next

“திமுகவிற்கு கூச்சமே இல்லையா?” – தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular