சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக புகார்: தூத்துக்குடியில் 4 பேர் கைது!

 

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சண்முகராஜ் (20) என்பவரை சாதிப் பெயரை குறிப்பிட்டு தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

இதேபோல், கோவில்பட்டி அருகே விவசாயத் தொழிலாளி விக்னேஷ் (26) என்பவரை கல்லால் தாக்கி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், அஜித் என்ற சூர்யா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இரு சம்பவங்களிலும் காயமடைந்த சண்முகராஜ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இரு சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

உத்தரகாண்டில் சுரங்கத்துக்குள் புகுந்த வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு!

Read Next

மனைவி குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு: விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற லாரி ஓட்டுநர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular