உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே நீர்மின் திட்டத்திற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுரங்கத்திற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்து பெருக்கெடுத்துள்ளது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடுமையான சூழலிலும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 தொழிலாளர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




