கரூர் அருகே லாரி ஓட்டுநர் ராஜலிங்கம் (28), தனது மனைவி தனலட்சுமிக்கும் தவெக நிர்வாகி முத்துசாமிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக குற்றம்சாட்டி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், தனது மனைவியும் முத்துசாமியும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் வீடியோவை பார்த்ததாகவும், அதன் காரணமாக மனமுடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது வாழ்க்கையில் அர்த்தமே இல்லை என அவர் வேதனையுடன் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷம் அருந்திய ராஜலிங்கம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜலிங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.




