ஜோ ரூட்டின் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

 

ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேட்ச்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் இந்த மைல்கல்லை 124 டெஸ்ட் போட்டிகளில் எட்டியுள்ளார். இதே 218 கேட்ச்களை பிடிக்க ஜோ ரூட்டுக்கு 166 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்டன.

இதன் மூலம் குறைவான போட்டிகளிலேயே ஜோ ரூட்டின் சாதனையை சமன் செய்த வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

Read Previous

விஜய் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

Read Next

சின்க்பீல்டு கோப்பையில் பிரக்ஞானந்தா அபார வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular