தூத்துக்குடி அருகே மரக்கடை தொழிலாளி ஞானப்பிரகாசம் (47), டைல்ஸ் கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக ஞானப்பிரகாசமும் அவரது மனைவி பாரதியும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகளை மரக்கடை ஊழியர் கிளின்டனுக்கு திருமணம் செய்து வைக்க பாரதி முடிவு செய்ததாகவும், அதற்கு ஞானப்பிரகாசம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து, பாரதியின் தூண்டுதலின் பேரில் கிளின்டன் ஞானப்பிரகாசத்தை டைல்ஸ் கற்களால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் பாரதி, கிளின்டன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




