கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் இடம்பெறும் நெருக்கமான காட்சிகள் குறித்து நடிகர் யஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுபோன்ற காட்சிகளில் கணவர் நடிப்பதை மனைவியர் ஏற்றுக்கொள்வது எளிதான விஷயம் அல்ல என்றாலும், தனது மனைவி ராதிகாவும் நடிகை என்பதால் திரைக்கதையின் தேவையைப் புரிந்துகொண்டு, தன் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக யஷ் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.




