கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: பேரவையில் அமைச்சர் விளக்கம்!

 

 

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.

 

அப்போது பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழர்களுக்கு எங்கு துன்பம் நேர்ந்தாலும் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் கூறினார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

தொடர்ந்து, “சிலருக்கு தமிழர்கள் மீது அவ்வப்போது பாசம் வரும்” என திமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார், இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் பதிலளித்தார்.

Read Previous

‘டாக்ஸிக்’ நெருக்கமான காட்சிகள்: மனம் திறந்த யஷ்!

Read Next

“தமிழர்கள் என்றாலே இளக்காரமா?” – சட்டப்பேரவையில் காங்கிரஸ் MLA ஆவேசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular