டாஸ்மாக்கில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் மதுபான கொள்முதல் ஆணைகளை வழங்குமாறு தலையிட்டதாகக் கூறப்படும் புகாரில், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரதீஷ் ராஜ் சண்முகவேல் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய ரதீஷ் ராஜ் சண்முகவேல் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




