தங்கம் விலை குறையுமா? முதலீட்டாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

 

அமெரிக்க பாண்ட் ஈல்ட் தொடர்ந்து உயர்ந்தால் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,760க்கு விற்பனையாகும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசுப் பத்திரங்களின் ஈல்ட் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் டாலர் மற்றும் பாண்ட் முதலீடுகளின் பக்கம் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாண்ட் ஈல்ட் உயர்வுடன் டாலரின் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டாலர் வலுப்பெறும் சூழலில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் என்றும், இதனால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவில் குறையக்கூடும் என்றும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

எனினும், சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதால் முதலீட்டாளர்கள் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள் டாலர் மதிப்பு மற்றும் அமெரிக்க பாண்ட் ஈல்ட் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு முடிவெடுப்பது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read Previous

30 நாட்கள் கூடுதல் சர்க்கரையை தவிர்த்தால் என்ன நடக்கும்?

Read Next

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆண் நண்பர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular