சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் விவாகரத்துக்குப் பிறகு தனியாக வசித்து வந்த 40 வயது பெண், புதுவஞ்சேரியைச் சேர்ந்த மோகன்ராஜ் (29) என்பவருடன் பழகி அவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். அவர்களுடன் அந்தப் பெண்ணின் 12 வயது மகளும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மோகன்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து தொல்லை அதிகரித்த நிலையில், சிறுமி பள்ளியில் தனது ஆசிரியரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர், சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். மேலும், சிறுமியின் தாயிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புகார் அளிக்காதது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.




