ஈரானுடனான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக விரைவில் அறிவிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
லாங் ஐலண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரானை தோற்கடித்த பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஹார்முஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகவும் கூறினார்.
டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை ஈரானுடையது என்றும், அதை அமெரிக்கா தனது பிராந்தியமாக அறிவிக்க முடியாது என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தொடர்பான இந்த மோதல், பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.




