காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், முதலில் அம்மாநில அரசிடம் பேசி தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை அவர் வலியுறுத்தினார்.
மேலும், கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் விவகாரம், ஈழத்தமிழர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், “இந்த விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை மக்கள் மறக்கவில்லை; எனவே பாஜகவை நோக்கி விரல் நீட்டி காங்கிரஸ் குறை கூற எந்த தகுதியும் இல்லை” என விமர்சித்தார்.




