சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
மேலும், “முதலமைச்சர் பேரவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவைக்கு வந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்தது கிடையாது. எனவே இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது” என பதிலடி கொடுத்தார்.
இதனால் சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது.




