அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின் பேரில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை விசாரித்து, அதில் திருப்தி அடைந்த பிறகே ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டன” என தெரிவித்தார்.
மேலும், ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை என்றும் சபாநாயகர் தரப்பு வாதிட்டது.
இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.




