தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள புதிய அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,500 நிதியுதவி, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பங்களுக்கு இலவசமாக 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.




