முதலமைச்சர் விஜயின் தனிச்செயலாளராக இருந்து வரும் ஜெகதீஷ் பழனிசாமி, தவெகவின் இளைஞரணி பொறுப்பை கைப்பற்ற முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கட்சியின் இணைப் பொருளாளராக உள்ள அவர், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை பெறுவதன் மூலம் கட்சிக்குள் தனது அரசியல் செல்வாக்கையும் தனித்த அடையாளத்தையும் உருவாக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இளைஞரணியை வழிநடத்தும் பொறுப்பு தொடர்பாக கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஜெகதீஷ் பழனிசாமிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தவெக வட்டாரத்தில் எழுந்துள்ளது.




