“கடந்த 34 ஆண்டுகளாக பிறமொழிப் படங்களை டப்பிங் செய்து நடிகராக இருந்த விஜய், தற்போது ஆட்சியிலும் டப்பிங் செய்கிறார்” என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். காவிரி, மேகதாது, நீட், தொகுதி மறுவரையறை, FCRA உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை, விஜய் தனது சொந்த சிந்தனையில் உருவானவை போன்று தற்போது முன்வைத்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பிறர் எடுத்த முயற்சிகளை தன்னுடையதாக காட்டிக்கொள்வதே விஜய்யின் அரசியல் என விமர்சித்த அப்பாவு, இதனை “டப்பிங் மாடல் ஆட்சி” என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




