முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்த தவெக மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா, “திமுகவிற்கு கூச்சமே இல்லையா? ஏற்கனவே இதுபோன்று பேசி, பேசி கொத்துப் பரோட்டா போட்டு உள்ளார்கள்” என விமர்சித்துள்ளார்.
மேலும், “முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதை தனது குழந்தைகளுடன் வீடியோவில் காட்டி விளக்கம் அளிக்க முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, உதயநிதியை விமர்சித்த முஸ்தபா, “விசாரணைக்கு அழைத்துச் சென்றால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏன் பயப்படுகிறீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.




