“திமுக பாஜகவுடன் கூட்டணி” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

 

 

திமுக தற்போது பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து செயல்பட்டு வருவதாகவும், டெல்லியில் முழுமையாக சரணடைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

 

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஒரு வார்த்தைகூட வலுவாக பேசவில்லை என விமர்சித்த அவர், தனது கட்சியினரின் சொத்துகளை பாதுகாப்பதற்காகவே திமுக இவ்வாறு செயல்படுவதாக சாடியுள்ளார்.

 

மேலும், டாஸ்மாக் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உரிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த வழக்குகளில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Read Previous

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

Read Next

வுஷூவில் பதக்கம் முதல் மருத்துவ கனவு வரை: அசத்தும் இரட்டையர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular