தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ரஷ்டன்பர்க் நகருக்கு அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 8 பேரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் மற்றும் விபத்தின் பின்னணி குறித்து தென்னாப்பிரிக்க காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




