சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது, “காவலர்கள் கைது செய்ய வந்தபோது நான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். நின்றால் கைது, நடந்தால் கைது என மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்படுகிறது” என குற்றம்சாட்டினார்.
மேலும், தாம் முதலமைச்சர் விஜயை “டம்மி முதல்வர்” என விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டதாகவும், “என்னை கைது செய்தது மிகப்பெரிய காமெடி” என்றும் தெரிவித்தார்.
திமுக எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு அரசிடம் திறன் இல்லை என்றும், “டம்மி முதல்வருக்கு யார் அமைச்சர், யார் எம்எல்ஏ என்பதே தெரியாது” எனவும் உதயநிதி சாடினார்.




