சென்னையில் MTC பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசைதிருப்பி, அவரது பையை பிளேடால் கிழித்து இரண்டு செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் பயணம் செய்தபோது முதியவர் ஒருவர் தொடர்ந்து பேச்சு கொடுத்ததாகவும், இதனால் தனது கவனம் திசைதிருப்பப்பட்ட நேரத்தில் பையை பிளேடால் கீறி செல்போன்களை திருடிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட இரண்டு செல்போன்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.60,000 என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது உடைமைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். சம்பவத்திற்கு MTC நிர்வாகமும் வருத்தம் தெரிவித்ததுடன், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.




