மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், மருத்துவமனை குறித்து வெளியிடப்பட்ட தகவல்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தென் மாவட்ட மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனை மற்றும் அதன் நிர்வாகம் குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக ஜோஸ் சார்லஸ் மார்டின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், மருத்துவமனை தொடர்பாக வெளியிடப்பட்டதாக கூறப்படும் தவறான செய்திகளை சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்திலிருந்து நீக்கி, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மன்னிப்பு கோரப்படாவிட்டால், சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறினர்.




