Railway Recruitment Board (RRB) சார்பில் Junior Engineer, Depot Material Superintendent மற்றும் Chemical & Metallurgical Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 3,993 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Diploma மற்றும் B.Sc கல்வித்தகுதி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Junior Engineer மற்றும் Depot Material Superintendent பணிகளுக்கு Diploma கல்வித்தகுதியும், Chemical & Metallurgical Assistant பணிக்கு B.Sc பட்டமும் தேவைப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படுகிறது. வயது வரம்பு 18 முதல் 33 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ST, OBC, PwBD உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது. தேர்வு 1-ம் நிலை மற்றும் 2-ம் நிலை Computer Based Test, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய முறைகளில் நடைபெறும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் 14.08.2026 முதல் 13.09.2026 வரை பெறப்படுகின்றன. இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ள நிலையில், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் RRB-ன் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதி மற்றும் விதிமுறைகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:




