சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், முதல்முறையாக முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார். விழா நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், தனது மகன் முதலமைச்சராக இருந்து சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய இந்த தருணம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த சிறப்பான தருணத்தை காண முடிந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷோபா சந்திரசேகர் கூறினார். அவரது இந்த மகிழ்ச்சியான பேச்சு நிகழ்வில் கவனம் பெற்றது.




