மேகதாது விவகாரம்: அமைச்சர் விஸ்வநாதனுக்கு வளர்மதி கடும் எச்சரிக்கை!

செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக தவெக அரசு இருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

பிற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக் கூடாது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனை குறிப்பிட்டு பேசிய வளர்மதி, கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என சவால் விடுத்தார்.

தைரியம் இருந்தால் கர்நாடகாவிடம் காவிரி தண்ணீரை கேட்டு வாங்கி வாருங்கள் என்றும், தண்ணீர் வாங்கி வந்தால் மந்திரியாக தொடரலாம், இல்லையென்றால் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் ரைமிங்காக விமர்சித்தார்.

Read Previous

முளைகட்டிய பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

Read Next

வடிவேலு – பிரபுதேவா நடித்த ‘பேங் பேங்’ டீசர் நாளை வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular