Oplus_16908288
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர் கே.எஸ்.எஸ்.ஆர். தவெக அரசை விமர்சித்து பேசினார்.
அப்போது, “தவெக அளித்த வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் ரூ.2,000 கொடுத்திருப்போம்” என அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “திமுக வாக்குறுதிகளை அளித்துவிட்டு, 28 மாதங்களுக்குப் பிறகுதான் கொடுத்தது” என பதிலடி கொடுத்தார்.
இதனால் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அரசின் வாக்குறுதிகள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.




