ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை: ஆயுஷ்மான் கார்டை பெறுவது எப்படி?

 

 

ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தின் மூலம் தகுதியுள்ள ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

 

பயனாளிகள் தங்களுக்கான ஆயுஷ்மான் கார்டை எளிதாகப் பெற, +91 72908 23838 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் ‘Hi’ என மெசேஜ் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்பிறகு வரும் தேர்வுகளில் ‘My Ayushman Card’ என்பதைத் தேர்வு செய்து, கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும்.

 

e-KYC நிறைவடைந்ததும், தகுதி உறுதி செய்யப்பட்ட பயனாளிகள் தங்களது ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை பெறும் போது இந்த அட்டை பயன்படும் என்பதால், தகுதியுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ சேனல் மூலமாக மட்டுமே விவரங்களை சரிபார்த்து பயன்படுத்துவது பாதுகாப்பானது.

Read Previous

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட நபரை விரட்டிப் பிடித்த பாட்டி!

Read Next

தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது ஏன் நல்லது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular