கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 31 வயதான மாணிக்கம் என்பவரை சிறுமியின் பாட்டி தேடிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அறிந்த பாட்டி, அந்த நபரை நடுரோட்டில் விரட்டிச் சென்று பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் அவரை அரிவாளால் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் மற்றும் அதன்பிறகு நடைபெற்ற தாக்குதல் குறித்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




