முதல்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்!

 

 

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 8.45 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் அவர் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் விஜய் ஏற்கிறார். தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழை தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். முதலமைச்சராக விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா என்பதால், இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய அரசு ஆலோசனை!

Read Next

லடாக்கில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.5!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular