“ஜோசப் விஜய் என்று சொன்னால் வலிக்குதா?” – சீமானை சாடிய நடிகை விஜயலட்சுமி!

 

 

‘ஜோசப் விஜய்’ என்ற பெயரை குறிப்பிட்டு சீமான் எழுப்பிய விமர்சனத்திற்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “ஜோசப் விஜய் என்று சொன்னால் எவனுக்கோ வலிக்குதாம். அதுதானே முதலமைச்சரின் உண்மையான பெயர்” என மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும், விஜய் பேசினாலும் தவறு, பேசவில்லை என்றாலும் தவறு என தொடர்ந்து விமர்சிப்பவர்களை கடுமையாக சாடிய அவர், இதுபோன்று பேசுபவர்களை பார்த்து “பைத்தியங்களா நீங்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, ‘ஜனநாயகன்’ படத்தில் ‘ஜோசப் விஜய்’ என பெயர் இடம்பெற்றது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், விஜயலட்சுமியின் இந்தப் பேச்சு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

‘சுப்ரமணியபுரம் 2’ வருமா? சசிகுமார் சொன்ன முக்கிய தகவல்!

Read Next

“விஜய்யின் ஆட்சி டப்பிங் மாடல் ஆட்சி!” – அப்பாவு கடும் விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular