‘என்ரிகா எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் தயாரிப்புகளான VSOP Exshaw Gold Brandy, Louis Vernant, Honey Bee, Veeran உள்ளிட்ட 11 மதுபான பிராண்டுகளின் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மதுபானங்களில், உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI சார்பில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
சோதனையில் விதிமீறல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மதுபான பிராண்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் அந்த 11 மதுபான பிராண்டுகளின் விற்பனை மற்றும் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.




