CPCL-ல் 60 காலியிடங்கள்: Diploma, B.Sc Chemistry படித்தவர்களுக்கு ₹1.05 லட்சம் வரை சம்பளம்!

சென்னையில் உள்ள Chennai Petroleum Corporation Limited (CPCL) நிறுவனத்தில் Junior Engineering Assistant (JEA)-IV பணிக்கு 60 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் Diploma மற்றும் B.Sc Chemistry படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST, OBC உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது.

Diploma அல்லது B.Sc Chemistry கல்வித்தகுதியுடன் 3 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு CBT மற்றும் Skill, Proficiency and/or Physical Test (SPPT) ஆகிய முறைகளில் நடைபெறும். SC/ST, பெண்கள், Ex-Servicemen மற்றும் PwBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் 14.08.2026 முதல் 11.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் CPCL-ன் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதி மற்றும் விதிமுறைகளை முழுமையாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

https://www.cpcl.co.in/wp-content/uploads/2026/08/Detailed-Adertisement-for-Recruitment-of-Non-Executive-Personnel-2026.pdf

Read Previous

13 வயது மகளுக்கு கொடூரம்: கள்ளக்காதலை மறைக்க தாயே உடந்தை!

Read Next

RRB-ல் 3,993 காலியிடங்கள்: Diploma, B.Sc படித்தவர்களுக்கு ₹35,400 சம்பளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular