முருகன் குறித்து அவதூறு பதிவு: தவெக நிர்வாகி மீது சைபர் கிரைம் வழக்கு!

 

 

தமிழ் கடவுள் முருகன் குறித்து எக்ஸ் தளத்தில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவிட்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மைக்கல் என்பவர் மீது திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

மத உணர்வுகளை புண்படுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர் பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 192, 196(1)(a)(b), 299, 352 மற்றும் 353 ஆகிய பிரிவுகளின் கீழ் Cr. No. 38/2026 என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

வழக்கின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

MTC பேருந்தில் நூதன திருட்டு: கவனத்தை திசைதிருப்பி 2 செல்போன்கள் அபேஸ்!

Read Next

அரிய வகை லார் கிப்பான் குரங்குகள் விவகாரம்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular