Oplus_131072
பட்டாணி குருமா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்….
250 கிராம் பட்டாணி
ஒரு பெரிய வெங்காயம்
4 பச்சை மிளகாய்
2 பல்லு பூண்டு
2 தக்காளி
கடுகு
கறிவேப்பிலை
2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
துருவிய தேங்காய் 1 கப்
செய்முறை …..
முதலில் பட்டாணியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
ஊற வைத்த பட்டாணிமற்றும் தக்காளியை சற்று நறுக்கி குக்கரில் போட்டு மூன்று விசில் விட வேண்டும்
பிறகு குக்கரை திறந்து பட்டாணி மற்றும் தக்காளியை சற்று கடைய வேண்டும்
அதன் பிறகு துருவிய தேங்காயுடன் நான்கு பச்சை மிளகாய் இரண்டு பல் பூண்டு மற்றும் இரண்டு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்
பின்னர் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட வேண்டும்.கடுகு நான்கு பொறிந்ததும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்க்க வேண்டும்
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சிறிதளவு கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.அதனுடன் வேகவைத்த பட்டாணி தக்காளி கலவையை ஊற்ற வேண்டும்
அதன் பிறகு அரைத்து வைத்த கலவையை ஊற்ற வேண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விட்டு, கொதிக்க வைக்க வேண்டும் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குருமாவைஇறக்க வேண்டும்.




