Oplus_131072
நெய் முறுக்கு செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கிலோ
பொரிக்கடலை – 1/2 கிலோ
எள் அல்லது சீரகம் – 1 மேசைக்கரண்டி
நெய் – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊறவைத்து உரலில் மாவாக்கி ஈரப்பசை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பொரிகடலையை உரலில் இடித்து மாவாக்கிக் கலந்து கொள்ளவும்.
உப்புத் தண்ணீர் தெளித்து எள் போட்டு நெய்யைக் காயவைத்து மாவில் ஊற்றி கட்டியாகப் பிசையவும்.
பிசைந்த மாவை முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு மாவை அதனுள் வைத்து காயவைத்து எண்ணெயில் முறுக்குப் பிழிந்து எடுத்து பரிமாறவும்.




